காஷ்மீரில் கடும் குளிரால் உறைந்து போன நீர் நிலைகள் : கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

0 1367
காஷ்மீரில் கடும் குளிரால் உறைந்து போன நீர் நிலைகள் : கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

காஷ்மீரில் நிலவும் கடும் குளிரால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நிலவும் உறைபனியால் ஏரிகள், குடிநீர் வழங்கும் நீர்நிலைகள், குடிநீர் தொட்டிகள், குழாய்கள் என அனைத்தும் பனியாக உறைந்துபோயுள்ளன.

மேலும் சாலைகள் முழுவதும் பனிமூடிக் காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் மைனஸ் 15 டிகிரியும், குல்காம் மற்றும் புல்வாமா ஆகிய பகுதிகளில் மைனஸ் 10 முதல் மைனஸ் 12 டிகிரி வெப்பநிலை உள்ளதால் இங்குள்ள மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

உறைபனி நீடித்தால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments