ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டால் 1 கிராம் தங்கம் பரிசு... 4.30 நிமிடத்தில் காலி செய்த பீமன்!

0 165118

ள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற பிரியாணி சாப்பிடும்  திருவிழாவில் நான்கரை நிமிடங்களில் ஒரு கிலோ பிரியாணியை சாப்பிட்ட இளைஞர் ஒருவர் ஒரு கிராம் தங்கக் காசை பரிசாகத் தட்டிச் சென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் ஈட்டிங் சேலஞ்ச் பாய்ஸ் மற்றும் ஜே சி ஐ சின்னசேலம் அமைப்புகள் இணைந்து 10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்தினர். இந்த பிரியாணி திருவிழாவில் கலந்துகொண்டு 10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியை சாப்பிடுடு  முடிப்பவர்களுக்கு தங்கக் காசு மற்றும் வெள்ளிக் காசுகள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் முதலில் வரும் 30 நபர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை என்றும், குறைந்த நேரத்துக்குள் சாப்பிடும் முதல் மூன்று நபர்களுக்கு மட்டுமே பரிசு என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.  

’கரும்பு திண்ண கூலியா?’ என்பது போலப் பிரியாணி சாப்பிடப் பரிசு என்ற அறிவிப்பு வெளியானதும் ஏராளமான பிரியாணி பிரியர்கள் பிரியாணி திருவிழாவில் கலந்துகொண்டனர். இதில், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான ராமகிருஷ்ணன் என்பவர் நான்கரை நிமிடத்துக்குள் ஒரு கிலோ பிரியாணியை சாப்பிட்டு அசத்தினார். பிரியாணி சாப்பிட்டதற்குப் பரிசாக ராமகிருஷ்ணனுக்கு ஒரு கிராம் தங்கக் காசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 10 கிராம் வெள்ளிக் காசு மற்றும் மூன்றாம் பரிசாக 5 கிராம் வெள்ளிக் காசு ஆகியவை போட்டியில் அடுத்தடுத்து வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

பிரியாணி திருவிழாவில் பலரும் பங்குகொண்ட நிலையில், நான்கரை நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியைத் தின்ற செய்த இளைஞரைப் பல தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments