'மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜி கன்னடர்' - கர்நாடக துணை முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை

0 4666

மராட்டிய சிங்கம் என அழைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி கன்னடத்தைச் சேர்ந்தவர் என கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டம் ஒன்றில் பேசிய அவர், சிவாஜியின் மூதாதையர் பெல்லியப்பா என்பவர் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள சொரட்டூரைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்ட கோவிந்த், பெல்லியப்பா மகாராஷ்டிரா சென்ற பின்னரே 4வது தலைமுறையாக சிவாஜி பிறந்தார் என்றும், அதனால் சிவாஜி கன்னடர் என்றும் குறிப்பிட்டார்.

அவரின் இந்தப் பேச்சு கன்னட மற்றும் மராத்தி மொழி பேசும் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments