சிரியாவில் 2 இடங்களில் கார் குண்டு வெடிப்பு; 11பேர் பலி - 30பேர் காயம்..

0 1143

சிரியாவில் வடக்கு Aleppo நகரில் நடந்த இரண்டு கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 11பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 30பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு படையினரும் போலீசாரும் இணைந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு ஒரே தூசியும், புகை மண்டலமும் காணப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments