மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி வீட்டுக்குத் திரும்பினார்

0 2386

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவ்ரவ் கங்குலி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நெஞ்சு வலி காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கங்குலி நலமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கங்குலி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை முடித்து கொண்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments