மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டுவரை தள்ளிப்போக வாய்ப்பு - மத்திய அரசு அதிகாரிகள் தகவல்
கொரோனா தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் - வீடு பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பித்தல் ஆகியவை கடந்த ஆண்டு நடபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்தத் திட்டம் தள்ளிப்போனது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பெரும்பாலான அதிகாரிகள் கொரோனா எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு வரை தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
Comments