இஸ்ரேல் தூதரகம் அருகே நிகத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்புத் தீவிரம்..!

0 1122
இஸ்ரேல் தூதரகம் அருகே நிகத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்புத் தீவிரம்..!

டெல்லியில், இஸ்ரேல் தூதரத்திற்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும், முக்கிய நகரங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்தார். சக்தி குறைந்த குண்டு என்பதால் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில், முன்னெச்சரிகை நடவடிக்கையாக, டெல்லி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நாகரங்களிலும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments