விறுவிறுப்பாக நடைபெற்ற அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி; துள்ளிக்குதித்த காளைகளை அடக்கி வீரம் காட்டிய காளையர்கள்..!
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வந்த காளைகளை அடக்கி, தங்களது வீரத்தை காளையர்கள் பறைசாற்றினர். அங்கு திரண்டிருந்த ஏராளமான பார்வையாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பல சுற்றுகளாக பங்கேற்றுள்ளனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
Comments