உலகளவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா விரைவாக செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி

0 1190
உலகளவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா விரைவாக செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி

லகளவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை இந்தியா மிகப்பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்வதாகவும், மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் நாடு விரைவாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

குடியரசு தினத்தன்று போராட்டக்காரர்களால், தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது நாட்டிற்கே வருத்தமான நிகழ்வு என அவர் தெரிவித்தார். வேளாண்துறையை நவீனப்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

மேலும், சாலை பாதுகாப்பு, ஃபாஸ்டேக், நவீன விவசாயம், கழிவுகளில் இருந்து மின் உற்பத்தி உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இதற்கிடையே, கேரளாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டும், ராஜப்பன் எனபவர் படகில் சென்று ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி வருவதை பிரதமர் மோடி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments