2 போக்சோ வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய விவகாரம்... நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை பணி நிரந்தரம் செய்யும் பரிந்துரையை திரும்பப்பெற்றது கொலீஜியம்
மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி Pushpa Ganediwala வின் பணி நிரந்தரம் குறித்த பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற்றுள்ளது.
சிறுமி பாலியல் தொந்தரவுக்குள்ளான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் கூடுதல் நீதிபதி Pushpa Ganediwala, ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் குற்றமாகாது எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு உட்பட 2 போக்சோ வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கூடுதல் நீதிபதி Pushpa Ganediwala வை நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் வழங்கிய பரிந்துரையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கடிதம் எழுதியுள்ளார்.
Comments