தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்

0 6642
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக டாக்டர் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவிக்காலம், இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் 47-வது தலைமைச் செயலாளராக டாக்டர் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இறுதியாக, மத்திய அரசின் கால்நடை பால் வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராக பணிபுரிந்த ராஜீவ் ரஞ்சன், அண்மையில் மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பில் பி.எச்.டி. முடித்துள்ள ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் நிதித்துறை, தொழில்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை என பல்வேறு துறைகளில், செயலாளர், முதன்மை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments