ஃபிரிட்ஜில் தீ பற்றி வீடு எரிந்த வழக்கு... நுகர்வோருக்கு ரூ. 14.30 லட்சம் வழங்க எல்.ஜி நிறுவனத்துக்கு உத்தரவு!

0 6594
கோப்பு படம்

கேரளாவில் ஃபிரிட்ஜ் தீ பிடித்து வீட்டிலும் தீ பற்றியதால் வீட்டு உரிமையாளருக்கு 14.30 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆழப்புலா மாவட்டம் சேர்தலாவை சேர்ந்தவர் வினோத் பி. லால். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி எல்.ஜி நிறுவனத்தின் ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த ஃபிரிட்ஜில் தீ பிடித்து வீடு பற்றி எரிய வீட்டிலுள்ள டி.வி. , வாஷிங்மெஷின் உள்ளிட்ட பல பொருள்கள் எரிந்து போய் விட்டன. இது தொடர்பான வழக்கு ஆழப்புழா மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இழப்பீடாக 14.30 லட்சம் வினோத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடையிலும் ஃபிரிட்ஜில் தீ பிடித்த சம்பவம் நடந்தது. கபீர் என்பவரின் வீட்டில் சில நாள்களுக்கு முன்பு வீட்டிலுள்ள ஃபிரிட்ஜ் வெடித்து சமையலறையில் தீ பிடித்தது. அக்கம் பக்கத்தினர் குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு முதற்கட்டமாக சமயல் எரிவாயு சிலிண்டரை அகற்றினர் .இதனால் , பெரும்விபத்து தவிர்க்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாவே , ஃபிரிட்ஜ்கள் இரவு பகலாக இயங்குபவை. மனித தவறுகளால் ஃபிரிட்ஜில் தீ பிடிக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. ஃபிரிட்ஜில் உள்ள கம்ப்ரஸர்கள் தீ பிடிக்க முக்கிய காரணமாக உள்ளன. ஃபிரிட்ஜின் இதயம் போன்ற உள்ள கண்டென்சர் காயிலை சுத்தம் செய்ய வேண்டும் கண்டென்சர் காயில் தூசுகளால் அடைத்துக் கொண்டிருந்தால் ஃபிரிட்ஜ்ஜின் ஆற்றல் குறைந்துவிடும். பின் கம்ப்ரெசர் வழக்கத்தைக் காட்டிலும் வெப்பத்தை அதிகமாக வெளியேற்றும். அதிக வெப்பம் வெளியேறுவதை உணர்ந்தால் உடனே கண்டென்சர் காயிலை மாற்றி விடுவதும் நல்லது. மேலும், 15 வருடங்கள் பழமையான ஃபிரிட்ஜை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது என்கிறார்கள்.

இது தவிர, ஃபிரிட்ஜ்களில் தயாரிக்க பயன்படுத்தப்படும் 45 சதவிகித பிளாஸ்டிக் பொருள்கள் எளிதில் தீ பிடிக்க காரணமாக இருக்கின்றனவாம். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல முறை ஃபிரிட்ஜில் தீ பற்றிய சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன. இங்கிலாந்தில் ஆண்டுக்கு 300 ஃபிரிட்ஜ்களில் தீ பிடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments