என்ஜிஓக்கள் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு பல்வேறு கிடுக்கிப்பிடி விதிகள்: மத்திய அரசு அமல்
தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நன்கொடை குறித்து 48 மணி நேரத்திற்குள் வங்கிகள் அறிக்கை அளிக்க வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (FCRA) கடந்த செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை அளித்து, மத்திய அரசிடம் இருந்து எப்சிஆர்ஏ சான்றிதழை, என்ஜீஓக்கள் பெற வேண்டும் என்பது அதன் முக்கியமான விதியாகும்.
இதன்படி, வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நன்கொடை, வரவு வைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள், வங்கிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Comments