உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்.! மேலும் பல அணைகள் கட்ட உறுதி.!

0 2320

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி கிராமத்தில், மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி வாரியம் ஏற்படுத்தப்பட்டு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றார். மேலும், கல்விக்கடன் மட்டுமின்றி, விவசாய கடனும் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

கொரோனாவால் உயிரிழந்த 109 பேரை, தன்னார்வலர்களுடன் இணைந்து, நல்லடக்கம் உள்ளிட்ட இறுதிச்சடங்குகளை செய்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிக்கு, மு.க.ஸ்டாலின், விருது வழங்கினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், முறையாகத் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். திமுக ஆட்சிக் காலத்தில் தான், தமிழ்நாட்டில் அதிக அணைகள் கட்டப்பட்டதாக பெருமிதம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், வருகின்ற காலங்களிலும் அது தொடரும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லி நசரத்பேட்டை ஊராட்சியில், மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments