ஊழியரை ஏமாற்றி ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை திருட்டு: சிசிடிவியால் சிக்கிய பெண் கைது
சென்னையில் நகைக்கடை ஊழியரை ஏமாற்றி ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையைத் திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.
அண்ணாசாலையில் இயங்கி வரும் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் என்ற அந்த நகைக்கடைக்கு கடந்த ஒன்றாம் தேதி 12 வயது சிறுவனுடன் ஒரு பெண் வந்துள்ளார். 4 கிராம் மதிப்புள்ள பழைய தங்கச் சங்கிலி ஒன்றை மாற்றி புதிய நகையை வாங்கிக் கொண்ட அந்தப் பெண், ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, 29 கிராம் எடைகொண்ட ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகையை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பொழிச்சலூரைச் சேர்ந்த தாட்சாயணி என்ற பெண்ணை கைது செய்தனர்.
Comments