அமெரிக்காவின் நோவாவேக்ஸ்-சீரம் இன்ஸ்டியூட் இணைந்து உருவாக்கியுள்ள புதிய தடுப்பூசி ஜூனில் அறிமுகப்படுத்தப்படும் - அடார் பூனவல்லா
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள கோவோவேக்ஸ் (Covovax) தடுப்பூசி, வரும் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என புனேவின் சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ அடார் பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி நல்ல விளைவுகளை தந்துள்ளதாகவும், இந்தியாவில் பரிசோதனைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளதாகவும் அடார் பூனவல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகள் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட், ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments