தற்போது உருமாறிய 3 வகை கொரோனா வைரஸ் 14 நாடுகளில் பரவியுள்ளது - ஐ.நா அமைப்பு எச்சரிக்கை
14 நாடுகளில் பரவியுள்ள 3 புதிய வகை கொரோனா வைரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தற்போது உருமாறிய 3 வகை கொரோனா வைரஸ், 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து நாட்டிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டவை இரு வகை கொரோனா வைரஸ் என்றும், மூன்றாவது வகை வைரஸ், பிரேசில் நாட்டின் அமேசனோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரசை விட உருமாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளது.
Comments