புதிய வேளாண் சட்டங்கள் ஒன்றரை ஆண்டுகாலம் நிறுத்திவைப்பு? பிரதமர் மோடி உறுதி எனத் தகவல்
புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகாலம் நிறுத்திவைக்க தயார் என, நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் போராடும் விவசாயிகளோடு 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்திருந்த வாக்குறுதியை சுட்டிக்காட்டி, பிரதமர் இந்த உறுதியை அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
டெல்லி விவசாயிகள் போராட்டம், வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரிய விளக்கத்திற்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார். கடந்துபோன நிகழ்வுகள் எத்தகையதாக இருந்தாலும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திறந்த மனதுடன் காத்திருப்பதாகவும், பிரதமர் உறுதிபட தெரிவித்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Comments