டெல்லியில் விவசாயிகள் போராட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை, இண்டர்நெட் சேவை துண்டிப்பு தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு

0 1923
டெல்லியில் விவசாயிகள் போராட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை, இண்டர்நெட் சேவை துண்டிப்பு தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு

லைநகர் டெல்லியில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு, காசியாபூர், திக்ரி ஆகிய எல்லைப் பகுதிகளில், நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை, இண்டர்நெட் சேவை துண்டிப்புத் தொடரும் என மத்திய அரசு கூறியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 66ஆவது நாளாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தினத்தன்று, செங்கோட்டையை முற்றுகையிட்டு, வன்முறையில் ஈடுபட்டதால், போராட்டம் நடைபெறும் பகுதிகளில், இண்டநெட் சேவை துண்டிக்கப்பட்டது.

பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை ஞாயிறு இரவு வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments