எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்..! முதல்வர், துணை முதல்வர் திறப்பு

0 5854
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்..! முதல்வர், துணை முதல்வர் திறப்பு

துரையில் 7 அடி வெண்கலச் சிலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். 

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவுக்கு வருகை வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, அமைச்சர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் யாகசாலை புனிதநீர் கலசத்தில் தெளித்த பிறகு கோயில் திறப்பு விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கோயிலை திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து 234 நலிவுற்ற அதிமுக தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர். விழாவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு வேல் வழங்கப்பட்டது.

முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து திறந்தவெளி வாகனத்தில் வந்த இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments