பழைய சாலையை தோண்டி எடுத்த பிறகே, புதிய சாலையை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பழைய சாலையை தோண்டி எடுத்த பிறகே, புதிய சாலையை அமைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில், பழைய சாலைகளை தேண்டி எடுக்கமால் புதிய சாலைகள் அமைக்கபடுவதால், சாலையின் உயரம் அதிகரித்து, நினைவு சின்னங்கள், புராதன சின்னங்கள் மற்றும் கோயில் ஆகியவை தாழ்வான பகுதிக்கு சென்றுவிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னம், விக்டோரியா ஹால், எழும்பூர் அருங்காட்சியகம் ஆகியவை இதற்கு ஆதாரமாக இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
Comments