தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மலர்தூவி மரியாதை
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்து, அவ்வப்போது இது தொடர்பாக வலியுறுத்தி வருவதாகக் கூறினார்.
Comments