விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்த விவகாரம்... மேலும் 2 பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்
விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்த விவகாரத்தில் மேலும் 2 பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்பெண்னை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட தடுப்பனையில், கடந்த 23ம் தேதி மூன்று மதகுகள் உடைந்து சேதமாகின.
கட்டுமானத்தின் போது கவனக்குறைவாக இருந்ததால் தான் உடைப்பு ஏற்பட்டதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர்கள் ஞானசேகர், ஜெகதீசன் ஆகிய இருவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Comments