அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

0 3986
அதிமுகவில் 100 சதவீதம் சசிகலா இணைத்துக் கொள்ளப்படமாட்டார்- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சசிகலாவோ அமமுக கட்சியோ அதிமுகவில் இணைக்கப்பட வாய்ப்பே இல்லை என்பது 100 சதவீதம் திட்டவட்டமான விஷயம் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், சசிகலா குறித்து கூறிய கருத்து மனிதாபிமான அடிப்படையிலானது என்றும், சசிகலா அரசியலில் ஈடுபடக் கூடாது என அவர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதிமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணிக்கு, தேர்தல் நெருங்கும்போது மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமையிடமிருந்து அறிவிப்பு வெளியாகும், பாமகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments