தமிழ்நாட்டில், ரூ.52,257 கோடி மதிப்பில், 34 புதிய தொழில் முதலீடுகள்: மாநில அமைச்சரவை ஒப்புதல்

0 1933

தமிழ்நாட்டில், 52 ஆயிரத்து 257 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 34 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பான அரசின் அறிக்கையில், 34 புதிய தொழிற்த் திட்டங்கள் மூலம், 93,935 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், மோட்டார் வாகன உற்பத்தி, சூரிய மின்னாற்றல் உற்பத்தித் துறைகளில், புதிய முதலீடுகள் வரப்பெற்றிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தமிழ்நாடு தொழில் கொள்கை-2021" வெளியிடவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments