தேவையற்ற அவதூறு பரப்பினால் இரகசியங்களை வெளியிடுவேன்... விவசாய சங்கத் தலைவர்களுக்கு பஞ்சாபி நடிகர் தீப் சித்து எச்சரிக்கை
தன்னை குறித்து தேவையற்ற அவதூறுகளை பரப்பினால், விவசாய சங்க தலைவர்களின் இரகசியங்களை வெளியிடுவேன் என பஞ்சாபி நடிகரும், தன்னார்வலருமான தீப் சித்து(Deep Sidhu) எச்சரித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று, செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டிருந்தபோது, தீப் சித்து, சீக்கிய கொடியேற்றி சர்ச்சைக்குள்ளானார்.
செங்கோட்டை சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான தீப் சித்து, வியாழக்கிழமை முகநூல் நேரலையில் பேசினார்.
அப்போது, ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டராக இருப்பவர், எப்படி, செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றுவார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments