பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் தாக்கல்
நாடாளுமன்றத்தில் வரும் ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
அதில் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு நிதி ஆண்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதம் சரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்பு நடவடிக்கை காரணமாக 2021 - 2022 நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன், கொரோனாவில் இருந்து மக்களின் உயிரைக் காக்க பிறப்பித்த ஊரடங்கு காரணமாக எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டது என்றும், வரும் காலத்தில் இது நேர்மறையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Comments