7.5 சதவீத உள்ஒதுக்கீடு புதுவை அரசுப் பள்ளி மாணவருக்கு பொருந்தாது - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவருக்கு மருத்துவப் படிப்பு இடம் வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தை சேர்ந்த, புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்த மாணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஊரைக் காட்டி புதுச்சேரி அரசும், படித்த பள்ளிக்கூடத்தை காட்டி தமிழக அரசும் உள்ஒதுக்கீடு வழங்க மறுப்பதாக மனுதாரர் தெரிவித்தார். மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் அனைத்து எல்லை மாவட்ட மாணவர்களும் இதே கோரிக்கையை முன்வைப்பர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்தந்த மாநிலத்தில் வசித்து, அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கே உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என தெரிவித்து, மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Comments