ஜெயலலிதா நினைவு இல்ல சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் - தலைமை நீதிபதி அமர்வு
ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
துவக்க விழாவுக்கு பின் நினைவில்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும், பிரதான நுழைவாயிலை மட்டும் திறக்க வேண்டும், கட்டிடத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என்றும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது, வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் என்றும், மேல்முறையீட்டு மனு குறித்து தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
Comments