சுகாதாரத்துறை முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை முன்களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருவதால், பிறதுறை முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Comments