பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி வீரர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ளார்

0 2968
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட டாக்சி ஓட்டுநரின் மகன் தன்வீர் சங்கா தேர்வாகியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட டாக்சி ஓட்டுநரின் மகன் தன்வீர் சங்கா தேர்வாகியுள்ளார்.

பஞ்சாபின் ஜலந்தர் பகுதியை பூர்வீகமாக கொண்ட தன்வீர் சங்காவின் தந்தை ஜோகா சிட்னி நகரில் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

19 வயதான தன்வீர் சங்கா ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 தொடரில், சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி, லீக் சுற்று முடிவில்  21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் அவர் தேர்வாகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments