அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினால் தங்கள் நாடு மீண்டும் ஒப்பந்தத்தில் இணையும் அமெரிக்கா திட்டவட்டம்
அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினால் மட்டுமே அந்த ஒப்பந்தத்தில் தங்கள் நாடு மீண்டும் இணையும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ஜோ பைடன் தயாராக இருப்பதாகவும், அணுசக்தி ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகளிலிருந்து ஈரான் வெகுதொலைவில் உள்ளதாகக் கூறினார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியதுடன், ஈரான் மீது பொருளாதார தடையும் விதித்தார்.
Comments