நூலிழையில் உயிர்தப்பிய துனீஷிய நாட்டு அதிபர்
கடிதத்தில் விஷம் தடவி கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் துனீஷிய நாட்டு அதிபர் நூலிழையில் உயிர்தப்பினார்.
துனீசிய அதிபர் கைஸ் சையதுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று, அவரது உதவியாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
யார் அனுப்பியது என்ற முகவரி இல்லாததால், அதிபரிடம் கொடுக்கமால் தானே பிரித்துப் பார்த்தபோது அதில் ஏதும் எழுதப்பட்டிருக்கவில்லை.
ஆனால் உடனடியாக நிலைகுலைந்து விழுந்த அவருக்கு பார்வை இழப்பு, தலைவலி ஏற்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அருகில் இருந்த மற்றொரு அதிகாரிக்கும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே துனீஷிய உள்துறை அமைச்சகம் கடிதத்தை ஆய்வு செய்ததில், விஷம் தடவப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துனீஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
Comments