வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைக்கு தடை மேலும் நீட்டிப்பு - மத்திய அரசு
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை மத்திய அரசு பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த தடை காரணமாக பன்னாட்டு சரக்குப் போக்குவரத்துக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 24 நாடுகளுக்கு இந்தியா விமான சேவையை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டில் முழு அளவில் உள்நாட்டு விமானங்கள் சேவை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக விமானப்போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்
Comments