பிறந்து 10 நாட்களில், தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு தாயாக மாறிய கோழி : அதிசயமாக பார்க்கும் மக்கள்

0 7255

செங்கல்பட்டு மாவட்டத்தில், தாயை இழந்த நாய் குட்டிகளை, கோழி ஒன்று காத்து வருகிறது. மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில், ஜெகன் என்பவரது வீட்டில், 5 குட்டிகளை ஈன்ற நாய் பிரசவத்திற்கு பின் 10 நாட்களில் இறந்து விட்டது.

கண்களைக் கூடத் திறக்காத நாய் குட்டிகளை அதே வீட்டில் வளர்ந்த கோழி, அரவணைத்து பாதுகாப்பதுடன், மற்ற விலங்குகள் நாய்க் குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments