பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி உடல் நிலை சீராக உள்ளது - கொல்கத்தா தனியார் மருத்துவமனை அறிக்கை

0 2064

பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்ததால், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது.

5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கங்குலியை நேற்று மீண்டும் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.  அவர் இதயம் செயல்பாடு தொடர்பாக பரிசோதித்துக் கொள்ள வந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments