அண்டை நாடுகளுக்கு 55 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து பரிசு -வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா
ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, நேபாளம், வங்க தேசம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஒரு வாரத்தில் 55 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா பரிசாக அளித்துள்ளது என்றார்.
அடுத்து வரும் சில நாட்களில் ஓமன், பசுபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.
சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, கனடா, மங்கோலியா நாடுகளுக்கு வர்த்தக ரீதியில் தடுப்பூசி அனுப்பப்படும் என்றும் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
Comments