நாட்டில் கொரோனா பாதிப்பு மகாராஷ்ட்ரா, கேரளாவில் அதிகம் - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

0 2822

நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவிகிதம் பேர் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். நாடு முழுவதும் இதுவரை 153 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

147 மாவட்டங்களில் கடந்த 7 தினங்களாக புதிய தொற்று எதுவும் இல்லை என்றும், 18 மாவட்டங்களில் 14 நாட்களாகவும், 6 மாவட்டங்களில் 21 நாட்களும், 21 மாவட்டங்களில் 28 நாட்களாகவும் புதிய தொற்று கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,13,353 ஆகவும், கேரளாவில் 8,99,932 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments