வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

0 1961

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் டிராக்டர் பேரணியை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகள், திக்ரி எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘அமைதியான வழியில் போராடுவது  ஜனநாயக உரிமை’ ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும்’ என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பினர்.போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments