செட்டப் போலீஸ் வைத்து நண்பர் கடத்தல் : சூது நபரை கவ்விய ரியல் போலீஸ்

0 4568
சென்னை எம்கேபி நகரில், பணம் புழங்கும் பங்குச்சந்தை நண்பனிடம் லட்சங்களை பறிக்க திட்டம் போட்டு, போலி போலீசாரை வைத்து கடத்தல் நாடகம் நடத்திய லட்சிய நபரை உண்மையான போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை எம்கேபி நகரில், பணம் புழங்கும் பங்குச்சந்தை நண்பனிடம் லட்சங்களை பறிக்க திட்டம் போட்டு, போலி போலீசாரை வைத்து கடத்தல் நாடகம் நடத்திய லட்சிய நபரை உண்மையான போலீசார் கைது செய்துள்ளனர்.

பங்குச்சந்தை முதலீட்டு அலுவலகம் நடத்தி வரும் சென்னை புழல் பகுதியை சேர்ந்த முகமது ரஃபீக், எம்.கே.பி நகரைச் சேர்ந்த தன்னுடைய நண்பரான விஜயகுமார் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர்.

விஜயகுமார் ஊற்றிக் கொடுக்க போதை தலைக்கேறிய நிலையில் ரஃபீக் இருந்தபோது போலீசார் என கூறிக்கொண்டு 5 பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். காவல்நிலையத்திற்கு புகார் வந்திருப்பதால் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்துச் சென்ற அவர்கள், போதையில் இருந்த ரஃபீக்கிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்து, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் டீமேட் கணக்கு மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர்.

அதிகாலை வரை ரஃபீக் மற்றும் விஜயகுமாரை காரில் வைத்து சுற்றிவிட்டு மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருவரையும் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இருவரும் எம்கேபி நகர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பேசிய விஜயகுமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

காவல்நிலையத்திற்கு வந்த ரஃபீக்கின் நண்பர்களும் விஜயகுமார் மீதே சந்தேகம் தெரிவிக்க, செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதே விஜயகுமார் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர். விஜயகுமாருக்கு கடத்தல் நாடகத்திற்கு உதவிய காசிம் என்பவனையும் கைது செய்தனர்.

விஜயகுமார் வீட்டின் அருகே கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பணம் பறிக்கும் நோக்கத்துடன் போதையேற்றி, செட்டப் போலீஸ் வைத்து ரஃபீக்கை கடத்தியதை, போலீசின் உண்மையான விசாரணையில் விஜயகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் செட்டப் செய்த போலி போலீஸ்காரர்கள் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments