ஆறாம் அறிவு.... குழந்தை சுவர் மீது ஏறுவதை தடுக்கும் பூனை!

0 31475

குழந்தை சுவர் மீது ஏறுவதை தடுக்கும் பூனையின் அறிவை கண்டு இணையதளவாசிகள் மெச்சுகின்றனர்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கக் கூடியவை. வீடுகளுக்குள் வரும் விஷப்பூச்சிகளை , பாம்புகளை எதிர்கொண்டு சண்டையிட்டு கொன்று தன்னுயிரையும் இழந்த நாய்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அதே போல, கடைக்கு சென்று வரும் நாய், வீட்டு வேலைக்கு உதவும் நாய் பற்றிய செய்திகளும் உண்டு.

நாய்கள் போலவே பூனைகளும் தங்கள் உரிமையாளர்கள் மீது மிகுந்த அன்புடன் இருக்கும். பூனைகளுக்கும் நாய்களுக்கும் சற்று வித்தியாசம் உண்டு. நாய்கள் வீட்டில் உள்ள அனைவரிடத்திலும் அன்பாக பழகும். ஆனால், பூனைகள் தனக்கு பிடித்தவரிடத்தில் மட்டுமே மிகுந்த பாசத்துடன் இருக்கும். இரவு வேளைகளில் தனக்கு பிடித்தமானவருடன் உறங்குவது பூனைக்கு பிடித்தமான ஒன்று. வீட்டில் பூனைகள் வளர்ப்பவர்களுக்கு அந்த அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும்.

அதே போல, குழந்தை மீது பாசம் வைத்துள்ள பூனை ஒன்று மாடியில் உள்ள சுவற்றில் குழந்தை ஏற முயல்வதை தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, குழந்தை மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கிறது. அந்த குழந்தை மாடியில் உள்ள  மொட்டை சுவரில் ஏற முயல்கிறது. அந்த சுவரில் ஏறினால் குழந்தை கீழே விழுந்து விடும் வாய்ப்பு அதிகம். இதை கண்ட பூனை குழந்தை சுவற்றின் மீது ஏறுவதை தன் கால் கொண்டு தடுக்கிறது. குழந்தை மீண்டும் மீண்டும் ஏற முயலோ பூனையோ தடுத்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வேறு இடத்தில் சென்று குழந்தை சுவற்றில் ஏற முயல அங்கு சென்றும் பூனை தடுக்கிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்ட என்கிற விவரம் தெரியவில்லை. 

இந்த வீடியோவை பார்த்த மக்கள் இந்த பூனைக்குத்தான் எவ்வளவு அறிவு என்று வியந்து போகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments