வியட்நாமில், 54 நாட்களுக்குப் பின் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு
வியட்நாமில், 54 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது ஒரே நாளில் 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவத் துவங்கியதும் அண்டை நாடுகளுடான எல்லைகளை மூடியதால், வியட்நாமில் இதுவரை 1,550 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தலைநகர் ஹனோய் அருகே மின்னணு தொழிற்சாலையில் பணியாற்றும் 83 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அந்த தொழிற்சாலை மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய 2,340 ஊழியர்கள் தனிமை படுத்தப்பட்டனர்.
Comments