வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ் ... மின்னல் வேகத்தில் செயல்பட்ட தீயணைப்புத்துறை!

0 8348

கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதனபெட்டி வெடித்து தீவிபத்து ,தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு கேஸ் சிலிண்டரை அகற்றியதால் உயிர்சேதம், பொருள்சேதம் தவிர்க்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை ஜின்னா தெருவை சேர்ந்தவர் கபீர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் . கபீரின் மனைவி பசீலா மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் வசிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் , இன்று காலையில் வீட்டின் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்து சமையலறையிலிருந்து தீ பிடித்தது. அக்கம் பக்கத்தினர் குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு முதற்கட்டமாக சமயல் எரிவாயு சிலிண்டரை அகற்றினர் .இதனால் , பெரும்விபத்து தவிர்க்கபட்டது . பின்னர் , பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீச்சியடித்து அணைத்தனர். குடியிருப்பு பகுதியில் வீட்டில் தீ பிடித்ததால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் காணபட்டது .

இந்த விபத்து குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு ஃபிரிட்ஜ் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது .இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. தீ பிடித்ததும் துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினருக்கு மக்கள் வெகுவாக பாராட்டினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments