விவசாயிகள் டிராக்டர் பேரணி போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாரை, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார் அமித்ஷா
விவசாயிகள் டிராக்டர் பேரணி போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த போலீசாரை, மருத்துவமனைக்கே நேரில் சென்று விசாரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறினார்.
டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள Sushruta Trauma Centre மருத்துவமனைக்கு சென்ற அமிதஷா, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் போலீசாரிடம் நலம் விசாரித்தார்.
இதேபோல, தீரத் ராம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் போலீசாரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
Comments