டெல்லி வன்முறை தொடர்பாக விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

0 1432
டெல்லி வன்முறை தொடர்பாக விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பாக ராகேஷ் திகாயத், யோகேந்திர யாதவ், தர்சன் பால் சிங், மேதா பட்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வன்முறை, குற்றச்சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைதியாகப் பேரணி நடத்துவது எனக் கையொப்பமிட்டுவிட்டு அதை மீறியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்கக் கோரி விவசாய சங்கத் தலைவர்கள் 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வழக்குகளில் தொடர்புடைய விவசாய சங்கத் தலைவர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்குச் சென்றால் அவர்களைத் தடுத்து நிறுத்த அறிவுறுத்தும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments