உயர்நீதிமன்றங்களில் சுமார் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதாக உச்சநீதிமன்றம் மத்திய அரசு மீது அதிருப்தி
உயர்நீதிமன்றங்களில் சுமார் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கான பரிந்துரைப் பெயர்ப் பட்டியல் மீது ஒன்றரை ஆண்டுகளாக முடிவெடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
25 உயர்நீதிமன்றங்களில் ஆயிரத்து 80 நீதிபதி பதவியிடங்கள் உள்ளதாகவும், அதில் 417 இடங்கள் காலியாக இருப்பதாகவும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா அமர்வு கூறியுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு 103 பெயர்களை முன்மொழிந்து உயர்நீதிமன்றங்கள் அனுப்பிய பட்டியலை, மத்திய அரசு அப்படியே போட்டுவைத்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பட்டியல் மீது உரிய காலத்திற்குள் முடிவெடுத்து, உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிசீலனைக்கு அனுப்பத் தவறினால், நீதி தாமதமாகும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
Comments