முறையாக சீருடை அணிய தெரியாததால், சிக்கிக் கொண்ட போலி ராணுவ வீரர்!

0 10324
போலி ராணுவ வீரர் மிதுன் வர்மா

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அம்பேத்கர் நகரில் ராணுவ அதிகாரிகள் தங்கும் குடியிருப்பு உள்ளது. அங்கு சந்தேகத்துக்கு இடமாக இளைஞர் ஒருவர் குடியரசு தினத்தன்று ராணுவ உடையில் சுற்றி திரிந்தார்.   அந்த இளைஞர் முறையாக சீருடை அணியவில்லை. இதை கண்டு சந்தேகமடைந்த உயர்  ராணுவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.   

இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.  பீகார் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் என்றும்  தன் பெயர்  மிதுன் வர்மா என்றும்  இளைஞர் கூறியுள்ளார். பீகாரில் ராணுவ பிரிவில் விசாரித்த போது,  இந்த இளைஞர் ராணுவத்தில் பணியாற்றவில்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து  மிதுன் வர்மாவை, ராணுவ அதிகாரிகள் காவல்துறையினரிடத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், மிதுன் வர்மா , ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா நகரை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் நகரில் பாதுகாவலராக  வேலை செய்து வந்த மிதுன் வர்மாவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. மாமியார் வீட்டில் தான்  ராணுவவத்தில் பணியாற்றி வருவதாக  மிதுன் வர்மா பொய் கூறியுள்ளார்.  அதனால்,  தன்னை ராணுவ வீரராக  காட்டிக்கொள்ள ராணுவ குடியிருப்புக்குள் சுற்றி திரிந்ததாக சொல்லப்படுகிறது. 

மேலும், மிதுன் வர்மா போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபுடிக்கப்பட்டுள்ளது .

இதனை தொடர்ந்து மிதுன் வர்மாவை காவலில் எடுத்துள்ள இந்தூர் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments