திருடு போன சிறுவனின் சைக்கிள்... முதல்வர் முதல் கலெக்டர் வரை களமிறங்கிய ஆச்சரியம்!

0 6215
சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கி பரிசளித்த கோட்டயம் மாவட்ட ஆட்சியர் (உள்படத்தில் சுனீஷ் )

மாற்றுத்திறனாளி ஒருவரின் மகனின் திருடு போன சைக்கிள் குறித்து விரிவான விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் காணாமல் போன சைக்கிளுக்கு பதிலாக புத்தம் புது சைக்கிள் வாங்கியும் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உருளிகுண்ணம் பகுதியை சேர்ந்தவர் சுனீஷ்.மாற்றுத்திறனாளியான இவரின் கால்கள் மேல் நோக்கி வளைந்திருக்கும் . இவரால் உட்கார கூட முடியாது. குப்புற படுத்துக் கொண்டேதான் சுனீஷ் தன் பணிகளை மேற்கொள்வார். வலது கையும் முற்றிலும் செயல்படாது. எனினும், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் சுனீஷ், அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார்.

சுனீசுக்கு மனைவியும் ஜஸ்டின் என்ற 4 ஆம் வகுப்பு படிக்கும் மகனும் ஒரு மகளும் உண்டு. தன் மகனின் பிறந்த நாளை முன்னிட்டு சுனீஷ் ரூ. 5,000 மதிப்பு கொண்ட சைக்கிள் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடர்கள் திருடி சென்று விட்டனர். தன் மகனுக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த சைக்கிள் காணாமல் போனதால், சுனீஷ் மிகுந்த வருத்தமடைந்தார்.

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் . ’அன்பு திருடர்களே என் மகனின் பிறந்த நாளுக்காக நான் வாங்கிக் கொடுத்த சைக்கிள் அது. தயவு செய்து திரும்பி தந்து விடுங்கள்' என்று உருக்கத்துடன் தன் வேதனையை தெரிவித்திருந்தார். சுனீஷின் இந்த பதிவு வைரலாக மீடியாக்களில் செய்தி வெளியாது.

இதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராஜி வியஜனே இந்த விவகாரத்தில் தலையிட்டார். உடனடியாக, சைக்கிள் திருடர்களை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும், கோட்டயம் மாவட்ட ஆட்சியர் அஞ்சனாவை தொடர்பு கொண்டு சுனீஷ் மற்றும் அவரின் மகனை நேரில் சென்று சந்திக்கவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, சுனீஷ் வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அஞ்சனா , புத்தம் புது சைக்கிள் ஒன்றை வாங்கி சிறுவன் ஜஸ்டினுக்கு பரிசாக கொடுத்தார். சைக்கிளை பெற்ற சிறுவன் மாவட்ட ஆட்சியருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினான். இந்த சம்பவம் குறித்து சுனீஷ் கூறுகையில், 'தன் பேஸ்புக் பதிவை பார்த்து விட்டு ஏராளமனோர் புதிய சைக்கிள் வாங்கி தர முன் வந்தனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments