மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் மேற்கு வங்க சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெறக் கோரி மேற்கு வங்க சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இது தொடர்பாக இரண்டு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் 169வது விதியின் கீழ் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
முன்னதாக 2014ம் ஆண்டு மம்தா அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Comments