ரயில் மோதியதில் சுக்கு நூறாக சிதறிய இருசக்கர வாகனம்

0 2533
ரயில் மோதியதில் இருசக்கர வாகனம் ஒன்று சுக்கு நூறாக சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.

ரயில் மோதியதில் இருசக்கர வாகனம் ஒன்று சுக்கு நூறாக சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. 

இளைஞர் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதைப் பார்த்து தண்டவாளம் அருகே இருந்த போது தவறுதலாக ஆக்ஸிலேட்டரை முறுக்கி விடவே அவரது பைக் தண்டவாளம் அருகே சென்று விழுந்தது. அதை எடுக்க சென்றவர், ரயில் வருவதை பார்த்து பின்வாங்கி விடவே, ஓரமாக கிடந்த பைக் ரயிலில் சிக்கி சிதறியது.

பைக்கை மீட்கும் முயற்சியை கைவிட்டதால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிது. ஆனால், ஆந்திராவில் எந்த ரயில் பாதையிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments